பத்தாண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணிசெய்த செய்தியாளர்களைப் பாராட்டிய ஆட்சியர்!

Published:

karur collector flag - 2026

கரூர்: நாட்டின் 73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர் அன்பழகன்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ஊர்க்காவல் படையினர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் நடத்திய அணிவகுப்பை இருவரும் பார்வையிட்டனர்.

தேசியக் கொடியில் உள்ள வர்ணங்களின் அடிப்படையில் அமைந்த பலூன்களை பறக்கவிட்டு சமாதானப் புறாக்களை பறக்க விட்டபின் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

karur collector flag2 - 2026தொடர்ந்து பல்வேறு துறைகளின் கீழ் 165-பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 38-லட்சம் 68-ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வாழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்,சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி அவர்களை கெளரவப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய செய்தியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவகர் சூர்யபிரகாஷ்,உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img