நெல்லையில் ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி

உள்ளூர் செய்திகள்

 கோடை  விடுமுறையை முன்னிட்டு நெல்லையில்  சிறப்பு நீச்சல் பயிற்சி ஏப்.1 ம் தேதி முதல் நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்ப,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நெல்லை பிரிவு சார்பில் பாளை. அண்ணா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள நீச்சல்குளத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு  நீச்சல் பயிற்சி ஏப்.1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.
சிறந்த பயிற்றுநர்களை கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 12 நாட்களில் நன்றாக நீந்துவதற்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் சேர விரும்புபவர்கள் ரூ.1000 கட்டண தொகை செலுத்தி பயிற்சி முகாமில் சேர்ந்து பயனடையலாம். காலை 6.30 மணிக்கு தொடங்கி நாள் முழுவதும் இந்த பயிற்சி நடைபெறும். பெண்களுக்கு பெண் பயிற்சியாளரால் காலை 11 மணி முதல் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
நிறைவு நாளன்று பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு நீச்சல்பயிற்றுநர் பிரேம்குமாரை தொடர்புகொள்ளலாம். நீர்நிலை விபத்துகளில் இருந்து தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்து கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.