இரவில் 2 ஆண் வன காவலர்களுடன் ஒன்றாக தங்கிய மூன்று பெண் ஊழியர்கள்! மாஞ்சோலை லீலை!

உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை
InShot 20200514 221626467 - 2026

மேற்கு தொடர்ச்சி மலையில் குதிரைவெட்டி என்ற இடம் அமைந்துள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக இந்த பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கப்பெற்றது. இந்த புலிகள் காப்பகத்திற்கு சுற்றுவட்டாரத்தில் மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் தனியார் கெஸ்ட் ஹவுஸ் நடைபெற்று வருகிறது.

இவை புலிகள் காப்பகத்திற்கு அமைந்திருப்பதால் முறையான அனுமதியின்றி யாராலும் வசிக்க இயலாது. குதிரைவெட்டி பகுதியில் இயங்கி வரும் கெஸ்ட் ஹவுஸ், பராமரிப்பு பணிகளை 2 வனவர்கள் மேற்பார்வையிட்டு வந்தனர்.

இந்த கெஸ்ட் ஹவுசை தற்போது இரவு நேரத்தில் தங்குவதற்கு எந்தவித அனுமதியும் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மேற்பார்வையிட்டு வந்த வனவர்கள் தங்களுடன் பணிபுரியும் 3 பெண்களை கெஸ்ட் ஹவுஸ் அழைத்து சென்றுள்ளனர். அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை மிரட்டி சாவியை பெற்று கொண்டு இரவு நேரத்தைக் கழித்துள்ளனர்.

ஊழியர்கள் உ டனடியாக சம்பந்தப்பட்ட அதிகா ரிகளிடம் தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் உ டனடியாக வனவர்களை கைது செய்தனர். மூன்று பெண்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏ ற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.