போலி தங்க கட்டி விற்று மோசடி! 3 லட்ச ரூபாயுடன் தலை மறைவு!

உள்ளூர் செய்திகள் சென்னை பொது தகவல்கள்

gold

சென்னை நீலாங்கரை வைத்தியலிங்கம் சாலை 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம், சோலுங்கநல்லூரில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு கட்டிட வேலை செய்யும் வெங்கடேசன் என்பவர் அடிக்கடி ஆயில் வாங்க வந்துள்ளார். இருவரும் நண்பர்கள் போல பழக ஆரம்பித்துள்ளனர். இந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் கஷ்டப்படுவதாக பொன்னுரங்கத்திடம் வெங்கடேசன் கூறியுள்ளார்.

தன்னிடம் ஒரு தங்கக்கட்டி இருப்பதாகவும், அதை யாரிடமாவது விற்றுக்கொடுக்க முடியுமா என பொன்னுரங்கத்திடம் வெங்கடேசன் உதவி கேட்டுள்ளார். அதற்கு பொன்னுரங்கமும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அப்போது ‘இந்த தங்கக்கட்டி உங்களுக்கு எப்படி கிடைத்தது’ பொன்னுரங்கம் கேட்டுள்ளார். அதற்கு திருச்சியில் பழைய கட்டிடம் ஒன்றை இடிக்கும் போது தங்கக்கட்டி கிடைத்ததாக வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பொன்னுரங்கம் தங்கக்கட்டியை எடை போட்டபோது 450 கிராம் இருந்துள்ளது.

ஒருகட்டத்தில் பொன்னுரங்கத்திடம், ‘நீங்களே இந்த தங்க்கட்டியை வாங்கிக்கொண்டு பணம் கொடுங்கள்’ என வெங்கடேசன் கூறியுள்ளார். இப்போது என்னிடம் பணம் இல்லை என பொன்னுரங்கம் கூறியுள்ளார் இதை அடுத்து அவருக்கு ஆசை காட்டி பாதி விலையில் கொடுக்கிறேன் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதனால் மனம் மாறிய வெங்கடேசன் 5 லட்சம் என பேசி மூன்று லட்சத்தை அட்வான்ஸாக கொடுத்துள்ளார்.

பிறகு இந்த தங்க கட்டியை எடுத்துக்கொண்டு நகை செய்பவர்களிடம் சோதித்ததில் அது பித்தளை தட்டில் தங்க முலாம் பூசப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் மனம் உடைந்தார். மேலும் தன்னிடம் இந்த போலி தங்க கட்டியை விற்றவரை தொடர்பு கொண்ட போது அவருடைய போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.