காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத் மகளுக்கு ஆபாச மிரட்டல்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ்
syath 1 - 2026

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத் மகளுக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ஆபாசமாக மிரட்டல் விடுத்துள்ளனர்.

முஃப்தி முகமதின் மகள் டாக்டர்.ரூபையா, சென்னை கேசவப் பெருமாள் புரத்தில் வசித்து வருகிறார். இவரின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் மிரட்டல் விடுத்த 3 செல்போன் எண்களுடன் ரூபையா புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
\
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மகள் என்று தெரியாமல், மர்ம நபர்கள் ஆபாச மிரட்டல் விடுத்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முப்தி முகமது சயீத் மகள் ரூபாயா அளித்த புகாரின் பேரில் 2 பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முஃப்தி முகமது சையத்-ன் 3வது மகளான ரூபையா கடந்த 1981ம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார்.

அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது. பின்னர் ரூபையா விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை; போதை, கொலை, குற்றங்கள் குறித்து மக்கள் கவலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.