spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅரசியல்தென்மாவட்ட ஜாதிக் கலவரங்களுக்கு திமுக.,தான் காரணம்: நாங்குநேரியில் முழங்கிய அண்ணாமலை!

தென்மாவட்ட ஜாதிக் கலவரங்களுக்கு திமுக.,தான் காரணம்: நாங்குநேரியில் முழங்கிய அண்ணாமலை!

- Advertisement -
annamalai in nanguneri

தென்மாவட்ட ஜாதிக் கலவரங்களுக்கு திமுக.,வே காரணம் என்று முழங்கினார் கே.அண்ணாமலை. தனது பாத யாத்திரையில் ராதாபுரம், வள்ளியூர் ஊர்களை அடுத்து இன்று நாங்குநேரிக்கு வந்தார் அண்ணாமலை. அப்போது அவர் இவ்வாறு பேசினார். இது குறித்து தனது சமூகத் தளப் பக்கத்தில் அவர் பகிர்ந்திருப்பதாவது…

வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரியில் #EnMannEnMakkal பயணம், மிகச் சிறப்பாக நடந்தேறியது. நாங்குநேரி மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக, நாங்குநேரி ஜீயர் அவர்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிடைத்தும், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வைத்திருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், நாட்டிலுள்ள பின் தங்கிய பகுதிகளை முன்னேற்ற அறிவித்திருக்கும் Aspirational Blocks திட்டத்தில் நாங்குநேரியும் தேர்வாகியுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, உட்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் நாங்குநேரியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்

மோடியின் முகவரி: நாங்குநேரி

முத்ரா கடனுதவியின் மூலம் தொழிலதிபரான திரு ஜானகிராமன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி இசக்கியம்மாள், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற ஆட்டோ ஓட்டுநர் திரு முத்துப்பட்டு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பலனடைந்த விவசாயி திரு குப்புசாமி, பிரதமரின் சிறுகுறு உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மாவு இயந்திரம் பெற்று தொழில் செய்யும் திரு ராமர், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பலனடைந்த திருமதி சந்தனமாரி. இவர்கள்தான் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

பட்டியல் சமூக மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல. திமுகவில் அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்து அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களை கருணாநிதி வஞ்சிக்கிறார் என்று கூறி, திமுகவில் இருந்தே வெளியேறினார். மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கும் SCSP நிதியில், 10,466 கோடி செலவிடாமல் வீணடித்தது திமுக.

இந்த ஆண்டு அந்த நிதியொல் 1,600 கோடியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றியுள்ளது. திமுகவின் சமூக நீதி, சமத்துவம் எல்லாம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காகத்தான். தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களுக்கு திமுகதான் காரணம். இன்றைய சபாநாயகர் அப்பாவுவே, ஜாதியை வளர்த்து, ஜாதிக் கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கியதே கருணாநிதிதான் என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளுக்கு திமுக தான் காரணம்.

தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எப்படி ஊழல் செய்வது என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலின் மொத்த வடிவமான, மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து அரசியல் செய்யும் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,132FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,904FollowersFollow
17,200SubscribersSubscribe