காயத்ரி ரகுராம் தான் காரணம்! விஜயலக்ஷ்மி குற்றச்சாட்டு!

உள்ளூர் செய்திகள் சினிமா சென்னை
vijaylakshmi - 2026

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பு தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்

சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை திடீரென வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி தனக்கு இன்னும் முழுமையாக உடல்நிலை குணமாகவில்லை என்றும் மூச்சுவிடவே தனக்கு சிரமமாக இருப்பதாகவும் ஆனால் மருத்துவமனை நிர்வாகம் என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டதாகவும் கூறியுள்ளார்

gayathri rahuram - 2026

மேலும் எனக்கு பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை என்றும் நான் நாடகம் எதுவும் போடவில்லை என்று கூறிய விஜயலட்சுமி, காயத்ரி ரகுராம் என் அனுமதி இல்லாமல் என்னை டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளார் என்றும் அன்று தனக்கு ஆதரவாக இருந்த காயத்ரி ரகுராம் தற்போது என்னுடன் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராம் மீது திடீரென நடிகை விஜயலட்சுமி வைத்துள்ள பகீர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.