அசல் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க அவசியமில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

Published:

அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அசல் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலர் பிடிபட்டனர். அவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img