மெரீனாவில் போராட்டம் என வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: போலீஸார் எச்சரிக்கை

உள்ளூர் செய்திகள் சென்னை

சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவப் படிப்பில் சேர முடியாததால், நீட் தேர்வு முறையை எதிர்த்து சிறுமி அனிதா செப்.1 நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சென்னை மெரினாவில் நள்ளிரவில் போராட்டம் நடத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

இதனால், மெரினாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.