மாணவன் கையைக் கீறிவிட்டு தப்பியோடிய இளைஞர்: ப்ளூவேல் பாதிப்பு?

Published:

நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியில், பள்ளிக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிய 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் கையை, பிளேடால் அறுத்து விட்டு தப்பி ஓடினார் இளைஞர் ஒருவர்.
பிளேடால் அறுபட்டதில், மாணவரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தது. வலியால் துடித்த மாணவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது ப்ளூவேல் கேம் எனும் ஆன்லைன் விளையாட்டு குறித்த பேச்சு அதிகம் பரவிவருவதால், அந்த ப்ளூவேல் கேம் டாஸ்க் ஒன்றாகக் கூட இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, Blue Whale  விளையாட்டு போதையால் ஏற்பட்ட விபரீதமா இது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் குமரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img