வயதான தாய்.. பராமரிக்க முடியாது.. கொலை செய்து எரித்த குடும்பத்தினர்!

Published:

Screenshot_2020_0819_130907

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருப்பாயி வயது 75. இவரது கணவர் ஏற்கனவே இறந்த நிலையில் மகள் பழனியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.

பழனியம்மாள் கணவரும் இறந்து விட்ட நிலையில் அவரது மகன் காளிதாஸ் மகள் காளீஸ்வரி கருப்பாயின் இரண்டாவது மருமகன் வசந்தகுமார் கருப்பாயியை பராமரித்து வந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலத்தில் குடியிருந்த வீட்டில் கருப்பாயி உடலில் துர்நாற்றம் ஏற்படுவதால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறிவந்த நிலையில் மதுரை திருநகரில் வீடு ஒன்றில் குடியேற முடிவு செய்தனர். ஆனால் அங்கேயும் இந்த பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக கருப்பாயியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

Screenshot_2020_0819_130852

இதனால் நேற்று முன்தினம் தலையணையால் முகத்தை வைத்து அழுத்தியும் கழுத்தை நெரித்தும் நான்கு பேர் சேர்ந்து கொலை செய்தனர். வசந்தகுமார் கருப்பாயியின் உடலை மூட்டையில் கட்டிக் கொண்டு ட்ரை சைக்கிள் உதவியுடன் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்தது திருமங்கலம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து DSP வினோதினி, இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணைக்கு பின்னர் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர் பராமரிக்க முடியாமல் கொலை செய்து எரித்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img