தென்காசி – வடகரையில் பொதுமக்களிடம் ஜிஸியா வரி விதிக்க தடை!

Published:

vadakarai-issue
vadakarai-issue

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த வடகரை.இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள ஊர்.அந்த ஊருக்குள் வரும் வாகனங்களுக்கு ஜமாத்தின் பெயரால் வரி வசூல் செய்ய யார் அதிகாரம் கொடுத்தது. ஜமாத்தின் பணம் முழுவதும் முஸ்லீம்களுக்கு,அரசு சார்பில் டன் கணக்கில் தரமான அரிசி இலவசம். இப்போது வரி என்ற பெயரில் தனி ஆவர்த்தனம். நாளை அந்த ஊரில் நடப்பதற்கு கூட ஜிசியா வரி வசூலிப்பார்கள்.வடகரை இருப்பது இந்தியாவிலா அல்லது பாகிஸ்தானிலா? – இப்படி கேள்வி எழுப்பி, சமூகத் தளங்களில் ஒரு பதிவு வைரலானது. இதை அடுத்து, அதிரடி நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது.

3 ஜமாத் அமைப்பு மூலம், தேங்காய் வியாபாரி முகமது என்பவர் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்திருப்பதாகவும், தனிப்பட்ட நபருக்கு அந்த உரிமையை ஜமாத்கள் கொடுத்திருப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர் 

இவ்வாறு வரிவசூல் செய்வதிலும் அதிகம் பாகுபாடு இருப்பதாகத் தெரியவருகிறது.   செங்கோட்டையில் இருந்து வடகரை செல்லும் ஆட்டோக்களில், இஸ்லாமியராக இருந்தால் வரி வசூல் செய்வதில்லை என்றும், இந்து வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், லாரிகள் இவ்வாறு பணம் செலுத்தியே வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். 

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
vadakarai-receipt
vadakarai-receipt

அந்த வகையில் இது இசுலாமிய பெரும்பான்மை கிராமத்தின் நவீன ஜிஸியா  வரி போன்று உள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமத்தில் இவ்வாறு இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பே  வரிவசூலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இவ்வாறு காலம் காலமாக வரிவசூல் செய்து வருவதாகவும், தற்போது குத்தகை எடுத்த நபர் ரசீது அச்சடித்து வசூலித்ததால் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை அடுத்து, வடகரையில் ஜெசியா வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே வடகரை என்ற கிராமத்தில் நுழையும் தலைச்சுமை வியாபாரிகள் முதல் சைக்கிள் தள்ளுவண்டி ஆட்டோ லாரி வரையிலான வாகனங்களுக்கு ஊர்த்தொகை என்ற பெயரில் வரி வசூல் செய்யப்பட்டு வந்தது இந்த வசூலுக்கு டவுன் பஞ்சாயத்து அரசிடம் அனுமதி பெறவில்லை. இதில் அரசு முத்திரை எதுவுமில்லை 

இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் இதையடுத்து தாசில்தார் ரோஷன் பேகம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வடகரை பேரூராட்சி செயல் அலுவலர் முரளி ஆகியோர் சென்று இப்படி வரிவசூல் செய்ய கூடாது மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்து ரசீது புத்தகங்களை பறிமுதல் செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
vadakarai-receipt1
vadakarai-receipt1

முன்னதாக இந்த விவகாரத்தில்,  சமாதான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  இது குறித்து அதிகாரிகள் தரப்பில் வெளியிட்ட தகவலில்… 

செங்கோட்டை வட்டம் வடகரை கீழ்பிடாகை கிராமத்தில் வெளியூர்களில் இருந்து வரும் சில்லறை வியாபாரிகளிடம் குத்தகை வசூல் செய்யப்பட்டதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 1 மாலை 5 மணி அளவில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது 

இதில் ஜமாத் சார்பாக கலந்து கொண்டவர்கள் ஷேக் அப்துல்லா அப்துல் ரசாக் ரஹ்மத்துல்லா அப்துல் ரசாக் இஸ்மாயில். அரசு சார்பாக கலந்து கொண்டவர்கள் செங்கோட்டை வட்டாட்சியர், வடகரை பேரூராட்சி நிர்வாக அலுவலர், அச்சன்புதூர் காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், வடகரை கிராம நிர்வாக அலுவலர்.

இருதரப்பும் பேசியதில் செங்கோட்டை வட்டம் வடகரை கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளிடம் பெரிய பள்ளிவாசல் ஜமாத் 1 தீ.ப. தெரு பள்ளிவாசல் ஜமாத்2, ஜாகீர் உசேன் பள்ளிவாசல் 3 மூலம் குத்தகை வசூல் செய்ததாகவும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தென்காசி கோட்டாட்சியர் அவர்கள் தொலைபேசி வாயிலாகவும் அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் அளித்துள்ள கடிதத்தின் அடிப்படையிலும் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதை அடுத்து  கீழ்காணும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் காலங்களில் இதுபோன்ற குத்தகை எதுவும் சில்லறை வியாபாரிகளிடம் வசூல் செய்வதில்லை என்றும் வசூல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு புத்தகங்களை வட்டாட்சியரிடம் அக்டோபர் 2 அன்று ஒப்படைத்து விடுவதாக ஜமாத்தார்கள் ஒப்புக் கொண்டதன் பேரில் கூட்டம் முடிவுற்றது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்

Related articles

Recent articles

spot_img