வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை! தந்தை கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
vankodumai
vankodumai

மதுரையில் வளர்ப்பு மகளான 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

மதுரை மகபூப்பாளையம் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வகுமார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணை, சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது மனைவியின் 8 வயது மகளை மிரட்டி, முனியாண்டி பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சிறுமியிடம் தாய் விசாரித்தபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தல்லாக்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முனியாண்டி, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.