ஓசூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்து: 12 பேர் பலி

Published:

hosur-train-accident ஓசூர்: பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்குச் சென்ற இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை இன்று காலை ஓசூர் அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. முலகொண்டப்பள்ளி மற்றும் சந்திராபுரம் இடையில், ஓசூர் அருகே ஆனைக்கல் என்ற இடத்தில் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. விபத்து குறித்து அறிந்ததும் கர்நாடக மாநில மற்றும் தமிழகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. உடனடியாக மீட்புப் பணிகள் துவங்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான சதானந்த கவுடாவும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயம் அடைந்துள்ளனர். உதவி எண்கள்: விபத்து குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி எண்கள்: 09731666751 / 08022371166 விபத்து நடந்தது எப்படி? இஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து ரயில் தடம் புரண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து, ரயில் இஞ்சின் அதன் மீது மோதி ரயில் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் தகவல்கள் :  

Related articles

Recent articles

spot_img