அதிமுக.,வினரை கனிமொழி எப்படிப் பார்க்க விரும்புகிறார் தெரியுமா?

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

kanimozhi - 2026

அதிமுக.,வினரை மீசையின்றி பார்க்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் திமுக., நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அமைச்சா் சி.வி.சண்முகத்தின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகம் வந்த தெலங்கானா முதல்வா் சந்திரசேகர் ராவ், நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழியை சந்தித்து பேசினாா். இதைத் தொடா்ந்து சந்திப்பு குறித்து விளக்குவதற்காக திமுக., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளா்களைச் சந்தித்தார். அப்போது அவர், நாங்கள் அரசியல் கூட்டணி குறித்து பேசவில்லை. இது ஒரு மாியாதை நிமித்தமான சந்திப்பு. நாட்டு நடப்பு, அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து விவாதித்தோம் என்றார்.

அண்மையில், அதிமுக., சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பொதுக் கூட்டத்தில் பேசிய போது, காவிாி மேலாண்மை வாாியம் அமைய வேண்டும் என்று தி.மு.க.வினா் போராட்டம் நடத்துகின்றனா். அவா்கள் ஆட்சிக் காலத்தில் காவிரிக்காக, மேலாண்மை வாாியம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டால் அதிமுக.,வினா் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வார்கள் என்று பேசினார்.

இது குறித்து எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, அதிமுக.,வினரை மீசையின்றி பாா்க்க விரும்பவில்லை என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.