மதுரை வங்கிக் கிளையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

madurai bank robeery - 2026

மதுரை:  மதுரையில் பட்டப் பகலில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்த மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியிடப் பட்டுள்ளன.

மதுரை கீழ ஆவணி மூலவீதி விளக்குத் தூண் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றார். திங்கள்கிழமை அன்று வங்கியின் மாடியில் பணியாளர் ஒருவரின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், சக ஊழியர்கள் அனைவரும் கீழிருந்து மேலே சென்று, மாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

அப்போது, காசாளர் அறையில் இருந்த ரூ. 10 லட்சத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. பணியாளர்கள் எவரும் இல்லாததை பயன்படுத்தி திருடப் பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் என்ன மாதிரியான காட்சிகள் பதிவாகி இருக்கிறது, யார் உள்ளே நுழைந்தது என்று போலீஸார் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, வங்கி வாடிக்கையாளராக வந்த நபர் ஒருவர், இருக்கையில் அமர்ந்த படி அனைத்தையும் கவனிக்கிறார். இருக்கும் ஓரிருவரும் நகர்ந்த பின்னர், தனி ஆளாக அமர்ந்திருக்கும் அவர், வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காசாளர் இருக்கும் கேபினில் எட்டி பணத்தை எடுக்கிறார். இரு முறை முயன்று இரு முறையாக பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு போலீஸார் மர்ம நபர் குறித்து தேடிவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.