தென்காசி ஷீரடி வைத்திய சாயிபாபா திருக்கோவிலில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப் பட்டது. இதில் கணேசன், வெங்கடேஷ், முருகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
கோவில் நிர்வாகி டாக்டர் அறிவழகன் மற்றும் டாக்டர் சியாமளா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.