வீம்புக்காக ‘காலா’வை ரிலீஸ் செய்ய மறுக்கின்றார்கள்: ரஜினிகாந்த்

சினி நியூஸ் சினிமா

kaala june7 e1528189394563 - 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் கர்நாடகாவில் மட்டும் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த படத்தை வெளியிட கன்னட திரைப்பட வர்த்தக சங்கமே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். காலா’ படத்தை திரையிட விரும்பும் திரையரங்குகளுக்கு அரசு பாதுகாப்பு தரவேண்டும் என்று நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

07 May30 Kaala - 2026இந்த நிலையில் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வீம்புக்காக ரிலீஸ் செய்ய கன்னடர்கள் ஒருசிலர் மறுப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.