மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

14 June30 Plastic ban - 2026

மதுரை: மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தத் தடை உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அரசு அலுவலகங்கள், கடைகள், ஹோட்டல்களில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுக்கள், பிளாஸ்டிக் கப்கள், பிளாஸ்டிக் ஸ்டிரா போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக வாழை, தென்னை மட்டைகள், பாக்கு மற்றும் மூங்கில் பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.