
#அன்றே சொன்ன ரஜினி என்பது இப்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
#அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ் டாக்கில் தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்ன உண்மைகளை எடுத்துச் சொல்லி, அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
சமூக விரோதிகளால் தூத்துக்குடி போராட்டம் வன்முறையாக மாறியதாக ரஜினி கூறியிருந்தார். இந்நிலையில், தூத்துக்குடி கலவரம் குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு, தூத்துக்குடி வாழ் மக்கள், வாக்குமூலம் அளித்தனர்.
இதைக் குறிப்பிட்டு, ரஜினி கூறியது இப்போது தெரிய வந்துள்ளது எனக் கூறி அவரது ரசிகர்கள் “#அன்றே சொன்ன ரஜினி” என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இது ட்ரெண்டாகி வருகிறது.



