கடற்கரையில் ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம்!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

புவனேஸ்வரம்:

புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஸ்ரீதேவியின் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகை ஸ்ரீதேவி (54) துபையில் பிப்.24 சனிக்கிழமை இரவு குளியலறையில் மயங்கி விழுந்து, அதிர்ச்சியில் மாரடைப்பு காலமானதாகக் கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிறந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்து மும்பை திரை உலகைக் கலக்கியவர். திடீரென அவர் காலமான செய்தி இந்தியா முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரிய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை பூரி கடற்கரையில் வடிவமைத்துள்ளார். அதில், வி மிஸ் யு எனப் பொருள் பட, நாங்கள் உங்கள் பிரிவால் வாடுகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.