மதுரை-கொல்லம் சாலையில் கடையநல்லூரில் 2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல்!

Published:

kadayanalluur traffic - 2026

?கடையநல்லூரில் சுமார் 8 கிலோ மீட்டடர் தொலைவுக்கு 2 மணி நேரமாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சரி செய்ய போதிய காவலர்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், குற்றாலம் வந்து குளித்துவிட்டு செல்லும் போது கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் குறுகிய சாலையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லும்போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் பிரச்னை தீவிரமடைந்து, வாகனங்களை எடுக்கவில்லை. இதனால், வரிசையாக இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து, கொல்லம் – திருமங்கலம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது.

சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் போக்குவரத்து நெரிசல் சீரானது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img