சர்க்கார் விவகாரம்! நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Published:

vijay cigarette - 2026

சர்கார் திரைப்படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரும் படம் சர்கார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது. அதில் விஜய் புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதற்கு அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாமக., நிறுவுனர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்ல, தமிழக சுகாதாரத்துறையும் படக் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், `சர்கார்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைபிடிப்பதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அவரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், சர்கார் திரைப்படத்தின் மூலமாக புகை பிடிப்பதை நடிகர் விஜய் ஊக்குவிக்கிறார். அதனால், அவரிடம் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் ரூ.10 கோடியை அபராதத் தொகையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img