கரூர்: சனிக்கிழமை மாலை 6.20 மணி அளவில் கரூர் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென ஒரு வீட்டில் இருந்த மின்சார ஒயர்கள் அறுந்து நடுரோட்டில் தொங்கின. அப்போது, அந்த வழியே பயணம் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.அன்பழகன் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தினார்.
பொதுமக்கள் அந்த சாலையில் பயணம் செய்யாத வகையில் ஏற்பாடுகளை செய்து மின்சாரத் துறை அலுவலர்களுக்கு அவரே செல்போனில் தொடர்பு கொண்டார். உடனடியாக இந்தப் பகுதியில் மின்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மின்சார வாரிய பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அந்தப் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் மூலம் போக்குவரத்து சரி செய்யப் பட்டது. அதன் பின்னர் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சரி செய்யும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் தொடங்கினர். அறுந்து கிடந்த மின்சார ஒயர்களை சரி செய்யும் பணிகள் தொடங்கிய பிறகே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.





ஆஹா இவர௠அலà¯à®²à®µà®¾ ஆடà¯à®šà®¿à®¯à®°à¯ வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ள௠சாரà¯.