பேரூர் ஆதினம் மறைவு: பாமக., ராமதாஸ் இரங்கல்!

Published:

santhalingar perur - 2026

சென்னை: பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் மறைவுக்கு பாமக., நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தி…

கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பேரூர் ஆதீனத்தின் மூலம் ஆன்மிகப் பணி மட்டுமின்றி, மிகச்சிறப்பாக தமிழ் பணியும் மேற்கொண்டார். கோவில் குட முழுக்குகளையும்,  திருமணங்களையும் தமிழ் முறைப்படி நடத்தி மாற்றத்தை ஏற்படுத்தியவர். அறநெறியும், சமயநெறியும் மாறாமல் வாழ்ந்த அவர், தீண்டாமை ஒழிப்புக்காக குரல் கொடுத்தவரும் ஆவார்.

கொங்கு மண்டலத்தில் தமிழ் கல்லூரி மூலம் தமிழைப் பரப்பினார். கொங்கு மண்டலத்தில் அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர். என் மீது அன்பும், பற்றும் கொண்டவர் ஆவார். பேரூர் ஆதீனத்தின் மறைவு அங்குள்ள மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img