திமுக.,வுக்கு மு.க.அழகிரி சாபம் விட்டுள்ளார். தன்னை திமுக.,வி இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துப் பார்த்தார். தொடர்ந்து தன் குடும்பத்தினர் மூலம் வலியுறுத்தி தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுப் பார்த்தார். ஆனால் அவரை கட்சியில் சேர்க்க விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர்.
இதனால் தனக்குள்ள செல்வாக்கைக் காட்ட, சென்னையில் கருணாநிதியின் சமாதியை நோக்கி பேரணி நடத்தினார். அமைதிப் பேரணி என்ற பெயரில், அஞ்சலி செலுத்தவே வந்தோம் எனக் காட்ட ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டிக் காட்டினார்.
தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.
இந்நிலையில், திமுக.,வுக்கு சாபம் விடுக்கும் வகையில் அழகிரி செய்தியாளர்களிடம் கூறிய கருத்துகள்…
திருப்பரங்குன்றத்தில் திமுக 4வது இடத்திற்கு போகப்போகிறது. திருவாரூர் தொகுதியிலும் திமுகவால் வெற்றி பெற முடியாது என்று தேர்தல் கணக்கைக் காட்டியுள்ளார்.
அழகிரி அரசியல் கட்சியில் இருந்தாக வேண்டிய நிலை. திமுக.,வில் வாய்ப்பு இல்லை என்றால், வேறு ஒரு கட்சியில் இருந்து கொண்டு அரசியல் செய்வார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நிலைமையைப் புரிந்து கொண்டு திமுக., வழிவிடவில்லை என்றால், திமுக.,வில் மீண்டும் ஒரு பிளவு தவிர்க்கமுடியாதது என்று எச்சரிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்!