19வது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி!

Published:

home
home

ஒரு வீடியோ சீனாவில் இருந்து வெளிவந்துள்ளது.

கிழக்கு சீனாவில் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து பாட்டி ஒருவர் தவறுதலாக விழுகிறார். ஆனால் அவர் உயிர் பிழைத்ததற்கு சாட்சியாக இந்த காட்சி வீடியோ வைரலாகிறது.

82 வயதான மூதாட்டி, துணி உலர்த்தும் ரேக்கில் இருந்து தலைகீழாக தொங்குவதை சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் (Social Media Video) காண முடிகிறது.

துணி உலர்த்தும் ரேக்கே, பாட்டி கீழே விழாமல் தடுக்க, பாட்டி ரேக்கில் மாட்டிக் கொண்டு தலைகீழாக தொங்குகிறார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். துணிகளில் மாட்டிக் கொண்டதால் தான் அவர் உயிர் பிழைத்தார்.

இந்த வைரல் வீடியோவில் (Viral Video) , அந்த பெண்ணின் இரண்டு கால்களும் 18வது மாடியில் உள்ள பால்கனியின் துணி ரேக்கில் தொங்குகிறது. 17வது மாடியில் உடல் தொங்குவதைப் பார்க்க முடிகிறது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் 18வது மாடி மற்றும் 17வது மாடியில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு கயிறுகளை இணைத்து தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி வெற்றி பெற்றது. 18வது மாடியில் இருந்த ஊழியர்கள் அந்த முதியவரை மேலே இழுக்க, அதே நேரத்தில், 17வது மாடியில் இருந்த மீட்புப் பணியாளர்கள் (Rescue Team) பாட்டியை மேலே தூக்கினார்கள்.

இறுதியில் பாட்டி வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்பதோடு, அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண் ​​பால்கனியின் கயிற்றில் துணி காயப்போடும்போது தவறி விழுந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பாட்டியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை மக்கள் பாராட்டினர். “தீயணைப்பு வீரர்களின் அற்புதமான வேலை” என்பதே பலரின் பதிவுகளின் ஒரே சாராம்சமாக இருக்கிறது.

An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8— South China Morning Post (@SCMPNews) November 23, 2021

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

Related articles

Recent articles

spot_img