Regional Meteorological Center 1 1 - 2026

புது தில்லி : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.

டிசம்பர் 17 அன்று ஒங்கோல் – காக்கிநாடா இடையே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள இந்தப் புயல் கரையை கடக்கும் போது தீவிரமடையும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்திய வானிலை மையம் வெள்ளிக்கிழமை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது இந்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு 960 கி.மீ., தொலைவில் உள்ளது.

இது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் புயலாகவும், பிறகு தீவிர புயலாகவும் மாற வாய்ப்புள்ளது. டிசம்பர் 17 ம் தேதி ஆந்திராவின் ஓங்கோல் – காக்கிநாடா இடையே இது கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக டிச.16, 17 ஆகிய தேதிகளில் ஆந்திராவின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.16ஆம் தேதி காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வரை வீசக்கூடும். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending