tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: வேலை நிறுத்தம் செய்ய எச்சரிக்கை விடப்பட்டிருந்தும், சம்பளப் பணம் பிடித்தம் செய்யப் படும் என்று தலைமைச் செயலாளர் கூறியிருந்தும், இன்று ஏழு லட்சம் பேர் பணிக்குச் செல்லவில்லை என ஜாக்டோ ஜியோ கூறியுள்ளது.

இடை நிலை ஆசிரியர்கள் சம்பள உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு, பள்ளிகள் இணைப்புத் திட்டம் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியா சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் இதன் காரணமாக, பள்ளிகள் பல மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

இது குறித்து ஜாக்டோ ஜியா ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேர் பணிக்குச் செல்லவில்லை என்ற தகவலைக் கூறினார். எனவே, எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்,.

இதனிடையே, வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டால் துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே, அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பார்ப்பதாக அவர்கள் கூறினர்

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending