25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

உள்ளூர் செய்திகள் கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

25-க்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 Aug 05 High court - 2026

போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய முரண்பாடுகளைg களைய வேண்டும், பழைய ஒய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப் பட்டிருந்தது.

இந்த வழக்கில் நடந்த விசாரணையில் அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் போராட்டம் காரணமாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போராட்டம் நடத்தி வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.