கொடநாடு குறித்து பேச… மேத்யூ சாம்வல்க்கு நீதிமன்றம் தடை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
mathewssamuel - 2026

கொடநாடு கொலை வழக்கு குறித்து ஊடகங்களில் பேசவும், ஆவணப் படங்களை வெளியிடவும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

பத்திரிகையாளர் மேத்யூ சாம்வல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ரூ.1.10 கோடி கேட்டு முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடுக்கப்பட்டது.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட சாம் மேத்யூ மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் சாம் மாத்யூ, சயான், மனோஜ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட 7 பேர் ஊடகங்களில் பேச தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் குறித்து ஆதாரமின்றி பேசவும், ஆவணங்களை வெயிடவும் கூடாது என்றும், முதலமைச்சரின் மனுவுக்கு 30-ம் தேதிக்குள் பதிலளிக்க மேத்யூ உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.