priyanka gandhi posters - 2026

பிரியங்காவுக்கு பொறுப்பு கொடுக்கப் பட்ட பின்னர், பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை அடித்து ஒட்டியுள்ளனர்.

அவற்றில், இந்திரா திரும்பினார் என்ற வாசகங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன. ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா, இந்திரா காந்தியின் சாயலில் இருப்பதால் காங்கிரஸார் அவரை தீவிர அரசியலில் ஈடுபட வெகு காலமாக வேண்டிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பிரியங்காவை இந்தத் தேர்தலில் களம் இறக்குகிறது காங்கிரஸ்.

இது ராகுலுக்குக் கிடைத்த தோல்வி என்று பாஜக., கூறினாலும், காங்கிரஸின் ஒரு பிரிவினர் இது வெற்றிக்கான ஒரு வழி என்கின்றனர். இருப்பினும், சோனியா, ராகுல் என ஒரு குடும்ப ஆதிக்கத்தை விரும்பாத பழைய காங்கிரஸ் தலைவர்கள், இதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில், துர்க்கையின் அவதாரமான பிரியங்கா காந்திஜீயை உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் பொறுப்புக்கு நியமித்த தேசியத் தலைவர் ராகுல் காந்திக்கு கோடி கோடி நன்றிகள் என்று துர்கை படம், இந்திரா படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டப் பட்டு வருகின்றன.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending