முன்னோர்கள் கூறிய திருஷ்டி கழிப்பு : திருஷ்டி சுத்திப் போடுவது எப்படி?

ஆலோசனைகள் ஜோதிடம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

kan thirushti - 2026

திருஷ்டி என்பது சமஸ்கிருத சொல். திருஷ்டி என்ற சொல்லுக்கு பார்வை என்று பொருள். மற்றவர் பார்வையால் ஏற்படும் பாதகத்தைத்தான் திருஷ்டிகழித்தல் என்பார்கள்.  தமிழில் கண் திருஷ்டி கழித்தலை கண்னேறு கழித்தல் என்று கூறுவர்.

முதலில் குழந்தைக்கு எப்படி திருஷ்டி சுற்றி கழிப்பது …?!

பிறக்கும் குழந்தைகள் அனைவரும் அழகோ அழகுன்னு எல்லோரும் கொஞ்சுவார்கள். குழந்தைக்கு கருப்பு பொட்டு வைப்பார்கள். இது எல்லோராலும் செய்யக் கூடிய ஒன்று!

நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப் பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயிலில் தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதலான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாலிப திருஷ்டி : ஒரு கைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடிக் கொண்டு, இளைஞரையோ / இளைய வயதுப் பெண்ணையோ கிழக்கு நோக்கி உட்கார வைத்து இடமிருந்து வலமாக மூன்று தடவையும், வலமிருந்து இடமாகவும் மூன்று தடவை சுற்றி கையில் இருக்கும் உப்பை தண்ணீரில் போட வேண்டும். உப்பு கரைவது போன்று திருஷ்டி கரைந்து விடும் .

பெரியவர்களுக்கு: புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம், தெரு மண், இவற்றை சேகரித்து வைத்துக் கொண்டு, பெரியவர்களை தெரு வாசலில் கிழக்கு நோக்கி இருக்க வைத்து மண் சட்டிக்குள் ஊமத்தங்காய் படிகாரம் தெருமண் இவை மூன்றையும் போட்டு மண் சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி… தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று… மூன்று தெருமுனை சந்திக்கும் இடத்தில் போட்டு உடைக்கவும்!

பின்னர் கையில் ஒரு பெருக்குமாறு (துடைப்பம்) எடுத்துச் சென்று ஓரமாகப் பெருக்கி தள்ளவும். இதனால் யாருக்கும் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும். பின்னர் வீடு திரும்பியவுடன் கை கால் கழுவி தலையில் சிறிது அளவு தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் .

இதைச் செய்ய முடியாதவர்கள் கடுகு, மிளகாய், உப்பு சிறிது தெருமண் கையில் எடுத்து கொண்டு குழந்தையை உட்கார வைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு நாய் கண்ணு, நரிக்கண்ணு நோய்க்கண்ணு நொள்ள கண்ணு கண்டக் கண்ணு கள்ளக் கண்ணு அந்தக் கண்ணு இந்தக் கண்ணு எல்லாம் கண்டபடி தொலையட்டும் என்று இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றிப் போட திருஷ்டி கழியும்.

பரிகார ஜோதிடர் S. காளிராஜன்,
ராஜ ஸ்ரீ ஜோதிட நிலையம், இலத்தூர் – நெல்லை மாவட்டம்- 627 803
எண்: 9843710327

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.