200 அடி ஆழ்துளைக் கிணற்றில்,விழுந்த ஆறு வயது சிறுவன் உயிருடன் மீட்பு பெற்றோர் ஆனந்த கண்ணீர்.!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் நலவாழ்வு
porweel 1 1 - 2026

ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் – உயிரோடு மீட்பு !

மகாராஷ்டிராவில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு உயிரோடு மீட்டுள்ளது.

கடந்த மாதம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த திருச்சியை சேர்ந்த சுஜித், ஹரியானாவைச் சேர்ந்த ஷிவானிஎன்ற இருவரும் அநியாயமாக உயிரிழந்தனர்.

இது இந்தியா முழுவதும் பரவலாக விவாதங்களை எழுப்பி விழிப்புணர்வை உண்டாக்கியது.

இருந்தும் இது போல ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது நின்றபாடில்லை.

இந்நிலையில் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கல்வான் என்ற கிராமத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில், ரித்தேஷ் என்ற ஆறு வயது சிறுவன் விழுந்துவிட்டான்

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் குழு கயிறு கட்டி அவனை மீட்டுள்ளது.

poweel chiled 4 - 2026

அதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இப்போது இயல்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது அனைவருக்கும் ஆறுதலையும் நிம்மதியையும் தந்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.