
பைத்தியம் தெளிய…
பித்தம் அதிகரித்தால் பைத்தியம் பிடிக்கும். இருபீர்க்கன் விதைகளை பழைய சாதத் தண்ணீரில் ஊற வைத்து, தோலை உரித்து விட்டு.அந்தப் பழைய சாத தண்ணீரையே விட்டரைத்து, அந்த நீரிலேயே கலக்கி உள்ளுக்குக் கொடுக்கவும். வாந்தி பேதி ஏற்படலாம். பேய்ப் பீர்க்கன் விதையாய் இருந்தால் சீக்கிரம் கேட்கும். அத்துடன் எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்து பச்சைத் தண்ணீரை குடம் குடமாக ஊற்றவும். சீக்கிரத்தில் பைத்தியம் தெளிந்து விடும்.
சங்கு புஷ்பத்தின் வேரை பசும்பாலில் அரைத்து காலையில் எண்பது நாள்கள் கொடுத்து வரவும். அல்லது கூவளத்தின் வேர், பட்டை. இலை, பூ, காய் இலைகளைக் கொண்டு வந்து தண்ணீரில் அரைத்து வெண்ணெய் சேர்த்து 90 நாள்கள் கொடுத்து வர பைத்தியம் குணமாகும்.
மசக்கைத் தொந்தரவா?
கர்ப்பம் தரித்த பெண்களுக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்படும். ஒரு லிட்டர் தண்ணீரில் ‘/, லிட்டர் பார்வியைப் போட்டு நன்றாக வேக வைத்து சிறிது உப்பும், அரை எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து தினமும் அவ்வப் போது சில நாள்கள் குடித்து வர மசக்கையில் உண்டாகும் தொந்தரவு மறையும். மலேரியா காய்ச்சலா?
துளசி சாறு, இஞ்சி சாறு, தேன் மூன்றையும் சம அளவு கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் மூன்று நாள்கள் சாப்பிட மலேரியா காய்ச்சல் குணமாகும்.
மிளகுடன் நொச்சி இலையைச் சேர்த்துக் கஷாயம் வைத்து சாப்பிட இரண்டொரு தடவையில் ஜுரம் தணியத் தொடங்கி விடும்.
வேப்பமர பட்டையையும் சண்பக மரப்பட்டையையும் சேர்த்து இடித்துக் காய்ச்சிய குடிநீர் தினம் இரு வேளை பன்னிரண்டு நாள்கள் கொடுத்து வர மலேரியா என்கிற குளிர் ஜூரம் நீங்கும்.
மஞ்சள் காமாலைக்கு…
மஞ்சள் காமாலை, இரத்த சோகை முதலிய வியாதிகளுக்கு கீழா நெல்லியை எலுமிச்சம் பழ அளவு அரைத்து பாலில் கலக்கி காலை வேளைகளில் மூன்று நான்கு தினங்கள் கொடுத்து வர நல்ல குணம் ஏற்படும்.
மணத்தக்காளி கீரையை வேக வைத்த நீரையெடுத்துக் குடிக்க இரண்டொரு முறை பேதி ஆகலாம். உடனே உடலில் மஞ்சள் நிறம்மாறி வரும். இதற்கு கரிசலாங்கண்ணி கீரையை ஒட்ட அரைத்துப் பாலில் கலந்து கொடுப்பதும் உண்டு.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து பசும்பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுக்கலாம். கரிசலாங்கண்ணி சாறெடுத்து கால் அவுன்ஸ் வீதம் நான்கு நாள்கள் உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும். உப்பு, புளி நீக்கி பத்திய உணவு சாப்பிட வேண்டும்.
எட்டியிலைக் கஷாயம் கொடுத்து வந்தால் குணமாகும். அல்லது வேப்பிலையை இடித்து சாறெடுத்து மூன்றுவேளை மூன்று அவுன்ஸ் கொடுத்து வர குணம் தெரியும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது கொடுக்க வேண்டும். அந்த நாள்களில் உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும்.
கோமயம், வெங்காயச்சாறு. வெள்ளாட்டுப் பால் மூன்றையும் சம அளவு கவந்து நாள்தோறும் அரை லிட்டர் அளவு சாப்பிட்டு வரவும். புளி, காரம், இல்லாமல் ஒரு வேளை சாப்பிட்டு பத்தியம் இருக்க மூன்றே நாள்களில் ஓடி விடும்.
நெல்லிக்காயை சாறெடுத்து அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
மலட்டுத் தனம் நீங்க…
பத்து மிளகைப் பொடி செய்து அத்துடன் பாகல் இலைச் சாற்றையும் கரிசலாங்கண்ணி இலைச்சாற்றையும் அளவோடு கலந்து 40 நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வர பெண்களுக்கு மலட்டுதன்மை குணமாகும்.
ஆலம் பழத்தை உலர்த்தி தூளாக்கி அத்துடன் கல்கண்டு சேர்த்து நாள்தோறும் ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வர இரண்டொரு வாரங்களில் மலட்டுத்தன்மை நீங்கி மகப்பேறு ஏற்படும்.
சாதிக்காய், கடுக்காய், துளசி விதை, சுக்கு நான்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு சிட்டிகை வீதம் ஆழாக்குப் பசும்பாலுடன் கற்கண்டு சேர்த்து நாற்பது நாட்கள் குடித்து வர ஆண் மலடு நீங்கும்.