
மலபார் வெள்ளரி சாம்பார்
தேவையானவை:
மலபார் வெள்ளரிக்காய் (மிகப்பெரிய வெள்ளரி) – அரை கிலோ,
வேகவைத்த துவரம்பருப்பு – அரை கப், புளித் தண்ணீர் – தேவையான அளவு, சாம்பார் பொடி – ஒன்றரை டீஸ்பூன்,
கீறிய பச்சை மிளகாய் – 2,
மஞ்சள்தூள் – சிறிதளவு, பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க
தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
மலபார் வெள்ளரியை தோல், விதை நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை தாளிக்கவும். இதில் நறுக்கிய மலபார் வெள்ளரிக்காய் துண்டுகள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் புளித் தண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து… கொதி வந்தவுடன் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து, சாம்பார் பதம் வந்தவுடன் இறக்கவும்.