
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது.
அந்நிறுவனத்தில் Project Scientist, Project Staff Nurse, Project Assistant, Project Technician, Project Technical Officer & Project Semi skilled Worker பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.
காலிப்பணியிடங்கள் :
ICMR-NIE நிறுவனத்தில் Project Scientist, Project Staff Nurse, Project Assistant, Project Technician, Project Technical Officer & Project Semi skilled Worker பணிகளுக்கு என 17 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
10 ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில்Diploma/ Graduate/ Master’s Degree/ GNM அல்லது B.Sc Nursing/ MBBS/ MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.61,000/- வரை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 15.11.2021, 16.11.2021 & 17.11.2021 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 15.11.2021, 16.11.2021 & 17.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்