
தமிழக அரசிற்கு உட்பட்ட விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் காலியாக உள்ள Record Clerk, பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 156 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு பி.எஸ்சி, 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : விழுப்புரம் அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் (TNCSC)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 156
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :
Record Clerk – 78 பணியிடங்கள்
Security, Watchman – 78 பணியிடங்கள்
கல்வித் தகுதி :
பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk) – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால காவலர் (Security, Watchman) – அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபவட்சம் 32 – 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் :
பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 கூடுதலாக ரூ.4049 அகவிலைப்படி வழங்கப்படும்.
பருவகால காவலர் – ரூ.2,359 கூடதலாக ரூ.4049 அகவிலைப்படி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.11.2021 தேதிக்குள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், த.நா.நு.பொ.வா.கழகம், நெ.ர, ஹாஸ்பிட்டல் ரோடு, விழுப்புரம்- 605 602 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், 15.11.2021 மாலை 5.00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tncsc.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தினைக் காணவும்.