போக்கோ எம்4 ப்ரோ 5ஜி: எல்லா சந்தைகளிலும்..!

Published:

Poco M4 Pro 5G 2
Poco M4 Pro 5G 2

அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, அசத்தலான சிப்செட் வசதி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி விற்பனை ஐரோப்பாவில் நவம்பர் 11 ஆம் தேதி தொடங்குகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை EUR 229 (இந்திய மதிப்பில் ரூ.19,600) ஆக உள்ளது.

பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடலின் விலை EUR 249 (இந்திய மதிப்பில் ரூ.21,300) ஆக உள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உடன் மாலி ஜி57 எம்சி2 ஜபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மேலும்MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

ஜாக் உள்ளிட்ட பல்வேறு இ
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் விரைவில் போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மாடல் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img