December 5, 2025, 7:40 PM
26.7 C
Chennai

தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

கரூர்: தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக உள்ளது ! இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கும், லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததற்கு தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் ! என்று முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே அப்ரூவர் ஆகி விட்டார்.

ஆகவே, மானமுள்ள தமிழன் உள்ளவரை இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் அரசாங்கம் மீண்டும் வரவிடமாட்டோம் என்று கோடானுகோடி தமிழர்கள் இன்றும் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்று கரூரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்குதல் தொடுத்தார்.

கரூரில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பா.ஜ.க மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும், கரூர் நகர பா.ஜ.க தலைவர் ஆர்.செல்வன் வரவேற்றார்.

maxresdefault 19 - 2025

பொதுக்கூட்டத்திற்கு வந்து சிறப்புரை ஆற்றினார் மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அப்போது., இலங்கையில் இலங்கை தமிழர்களுக்கு மிகப் பெரிய கொடூரங்கள் நடைபெற்றன. 1991 ம் ஆண்டு, பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதற்கு யாரெல்லாம் காரணம் என்று சிறையில் அடைக்கப்பட்டார்களோ, அந்த குற்றவாளிகளை, ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை பார்ப்பதற்காக, ராஜிவ்காந்தியின் மகள் பிரியங்கா காந்தி அவர்கள் வேலூர் சிறையிலே, 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ம் தேதி யாருக்கும் தெரியாமல், சிறைக்கு உள்ளே போகின்றார்கள், போலீஸ், டி.ஜி.பி, சிறை அதிகாரிகளுக்கு தெரியாது, முதலமைச்சருக்கு தெரியாது, யாருக்கும் தெரியாது, மாயாவி புகுந்தி போவது போல, பிரியங்கா காந்தி ஜெயிலுக்குள் சென்றார்கள் என்ற பொன். ராதாகிருஷ்ணன், அந்த சந்திப்பு குறித்து, 15 தினங்களுக்கு பிறகு தான் கடிதம் வருகின்றது. ஆனால், ராஜிவ்காந்தியின் மகள் பஞ்சாயத்து மெம்பர் கூட கிடையாது, ஆனால் சிறைச்சாலைக்குள் சென்று பார்க்கின்றார்கள். அதற்கு விசாரணை கிடையாது. தமிழகத்தினை ஆளும் அரசாங்கமாக தி.மு.க உள்ளது. அதே நேரத்தில் மத்தியில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் யாரும் இந்த சந்திப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு இலங்கையில் யுத்தம் தீவிரமடைகின்றது. நமது தமிழ் சொந்தங்கள் கொல்லப்படுகின்றார்கள். பெண்கள் மானபங்கப் படுத்தப்படுகின்றார்கள். பச்சிளங்குழந்தைகள் அனாதைகளாக ஆக்கப் படுகின்றார்கள். நமது நூல்களும், நூலகங்களும் அழிக்கப்படுகின்றன.

ஆக, 2008 முதல் 2009 மே மாதம் 18 வரை யுத்தங்கள் நடைபெற்றன. தி.மு.க தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான கருணாநிதி, அறிக்கை ஒன்றை விடுகின்றார். அதில், உண்ணாவிரதம் இருப்பதாகவும், 2009 ம் ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தக் கோரி இருக்கின்றார். மூன்று நாட்கள் உண்ணாவிரதம்! திடீரென்று உண்ணாவிரதத்தில் இருந்து எழுந்த  தி.மு.க தலைவரும், அப்போதைய முதல்வருமான கருணாநிதியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கின்றனர்.

அதற்கு கருணாநிதி, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, யுத்தம் முடிந்து விட்டதாக சொன்னார்கள் என்றும், அதனால் தான் (கருணாநிதி) எழுந்திருப்பதாகவும் கூறினார். அப்போதைய மத்திய அரசில் காங்கிரஸ் ஆட்சியில், 13 அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால்  தமிழகத்தினை சார்ந்த மத்திய அமைச்சர்களிடம் கேட்கவில்லை,. ஆனால் வங்க தேசத்தினை சார்ந்த பிரணாப் முகர்ஜியிடம் கேட்டாராம், யுத்தம் முடிந்து விட்டது என்று!

அதனால் உண்ணாவிரத்தில் இருந்து தி.மு.க தலைவர் கருணாநிதி எழுந்தாராம்!  இவர் உண்ணாவிரத்தில் இருந்து எழுந்த பின்பு அன்றைய 2009 ம் வருடம் ஏப்ரல் மாதம் 24 ம் தேதி, மிகப் பெரிய ஆயுதப் போராட்டம், 24 ம் தேதிக்கு பின்பு மே மாதம் 18 ம் தேதிக்குள் 1 ½ லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே, கரங்கள் சாதாரண கரம் அல்ல, தமிழர்களை கொன்ற கைகள்! மிக மோசமாக நடந்த அந்த யுத்தத்தில் தமிழர்களை கொன்றதை யாரும் மறக்க மாட்டார்கள். அதற்கு இலங்கை அதிபர் கொடுத்த விளக்கம், அந்த ராஜபக்‌ஷேவின் சொந்த சகோதரர் கொடுத்த விளக்கம், இந்த யுத்தம் வெற்றி மற்றும் வழிகாட்டி நடத்தியது …காங்கிரஸ், தி.மு.க கூட்டணி அரசாங்கம் என்றார்.

கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே கூறுகின்றார்… இந்த யுத்தம் முழுவதற்கும் காரணம் காங்கிரஸ் அரசாங்கம் என்று அபரூவர் ஆகி விட்டார்.

ஆகவே, லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் ? ராஜபக்‌ஷே சொல்லி விட்டார்… தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி தான் தமிழர்களை அழித்த யுத்தத்திற்கு காரணம் என்று!

ஆனால் அதை பற்றியும், பல லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொன்று குவித்ததற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க தான் என்று தெரிந்தும் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் இயக்க உணர்வாளர்கள் யாராவது பேசினார்களா ?

திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணியில் உள்ள கட்சியினர் யாராவது பேசினார்களா ? ஏன் ?

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சொன்ன வார்த்தை என்னவென்றால் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சி மீண்டும் அமரும், ஆகவே, பா.ஜ. கட்சி, மீதமுள்ள தமிழர்களை காக்கும் என்றும் தமிழர்கள் கூறி உள்ளனர்.

ஆகவே, கால்களை தொட்டு, பாதம் பணிந்து வணங்கி, வரக்கூடிய தேர்தல், இலங்கையில் இருந்த லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்த நபர்களுக்கு தமிழர்கள் அளிக்கும் வாக்கு, அந்த தமிழர்களுக்கு போடும் புஷ்பாஞ்சலியாக இருக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோட்ட இணை பொறுப்பாளர் கே.சிவசாமி, மாவட்ட செயலாளர்கள் பரணிதரன், கே.பி.மோகன், வி.பி.நவீன்குமார், மாநில அணி பிரிவு கோபிநாத், இளைஞரணி நாடாளுமன்ற கோட்ட பொறுப்பாளர் கார்த்திகேயேன், மாவட்ட பொதுச்செயலாளர் கைலாசம் உள்ளிட்டோர் இருந்தனர்.

1 COMMENT

  1. Pin Radhakrishnan speach is really very nice making public realise the true faces of two parties .what answer is with them for Priyanka going inside jail without permission. Will Stalin date to file a suit now against her This speach in every village will be sufficient for BJP.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories