charukesi - 2026

பிரபல இதழாளர், கலை விமர்சகர், இசை விமர்சகர் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் சாருகேசி இன்று அதிகாலை காலமானார். அண்மைக் காலமாக உடல் நலம் சரியின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

எழுத்தாளர் சாருகேசி, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தவர். நான்கு சகோதரர்கள் ஒரு சகோதரியுடன் சென்னையில் வாழ்ந்து வந்த சாருகேசி, துவக்கத்தில் புகழ்பெற்ற மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னாளில் எழுத்துத் துறையில் தடம் பதித்தார்.

கல்கி, விகடன், கலைமகள், தினமணி, தினமணிக் கதிர், தினமலர், குமுதம், துக்ளக், அமுதசுரபி, மஞ்சரி என பல்வேறு இதழ்களிலும் இசை விமர்சனங்கள், கலை விமர்சனங்கள், நிகழ்வுகள், கட்டுரைகள், பேட்டிக் கட்டுரைகள், கதைகள் எழுதியிருக்கிறார். இவரது சகோதரர் லெமன் என்ற லெட்சுமணன், பிரபல இதழான மஞ்சரி டைஜஸ்ட் இதழின் ஆசிரியராக இருந்தவர். முன்னோடி எழுத்தாளர் அமரர் தேவனின் உறவினர் சாருகேசி.

இல்ல முகவரி: 3, அபிராமி அபார்ட்மென்ட்ஸ்,
எண் 18, அபிராமபுரம் முதல் தெரு, சென்னை 18.
தொலைபேசி 044 24995875

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending