இந்து இயக்கத்தினரை தரக்குறைவாக பேசிய ஆய்வாளர்!

Published:

FB IMG 1552650344319 - 2026

காவல் துறையில் இருக்கும் சில  கருப்பு ஆடுகள் இஸ்லாமிய இயக்கத்தவரிடம் பணம் பெற்றுக் கொண்டு இந்து இயக்கங்களைச் சேர்ந்த அப்பாவிகளை வழக்குகள் போடுவதாக மிரட்டுகின்றனர் என்று இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டைக் கூறுகின்றனர்.

நடந்த சம்பவம் குறித்து இந்து முன்னணியைச் சேர்ந்த இளங்கோவன் திருநாவுக்கரசு நம்மிடம் கூறியபோது….

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ் தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது குண்டுகள் வீசியது. இதை சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் பட்டாசு வெடித்து சிலர் கொண்டாடினர். இதற்காக வழக்கு போடுவதாக காவல் நிலையத்திற்கு இந்து இயக்கத்தவர் சிலரை நேற்று வரச் சொன்னார் எழும்பூர் காவல் ஆய்வாளர்.

அதன் பேரில் காவல் நிலையம் சென்ற நமது சகோதரர்களை மரியாதை குறைவாகவும், வாடா, போடா என்றும், சட்டையை பிடித்து இழுத்தும் உங்களையும், உடன் வந்த அத்தனை பேரையும் ரிமாண்ட் செய்து விடுவேன் என்று காவல் ஆய்வாளர் எல்லை மீறி உள்ளார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

உடன் சாதாரண உடையில் இருந்த ராமையா என்கிற போலிஸ் டிரைவர் எவனோ எங்கோ குண்டு போட்டா இங்கே ஏண்டா கொண்டாடுறிங்க? உங்க வீட்டில் கொண்டாடுங்க என்றும் இராணுவத்தை கேவலமாக பேசி உள்ளார்.

இந்த விவரம் தெரிந்தவுடன் நேரில் காவல் நிலையம் சென்று சட்டப்படி வழக்கை சந்திக்க தயார் எனக் கூறி நமது சகோதரர்களை அழைத்து வந்தோம்.

இன்று திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் சுகுணாசிங் அவர்களிடம் ஆய்வாளர் மற்றும் டிரைவர் ராமையா மீது புகார் கொடுக்கப்பட்டது… என்று கூறினார்.

https://m.facebook.com/story.php?story_fbid=1241370362688093&id=100004454221120

Related articles

Recent articles

spot_img