சென்னை: வயதான அர்ச்சகர்களின் பூணூலை 6 பேர் கொண்ட கும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகை திருட்டு கும்பலா என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை… சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 80 வயது முதியவர் திரு.விஸ்வநாத குருக்கள் அவர்கள் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பும்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சிலர் இரு சக்கர வாகனத்தில் வந்து முதியவரின் கன்னத்தில் அறைந்து அவரது கையை முறித்து அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து அவமானபடுத்தி உள்ளனர். அவரது வேட்டியையும் கழற்றி எறிந்து கோழைத்தனமான செயலை செய்துவிட்டு துணிச்சலுக்கு பெயர் பெற்ற பெரியார் அவர்களின் பெயரை முழங்கிவிட்டு சென்றுள்ளனர். இந்த நபர்கள் திராவிட கழகத்தை சேர்ந்தவர்களா அல்லது நகை பறிக்கும் திருட்டுக் கும்பலை சேர்ந்தவர்களா என்று சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
தி.க.வினரா? நகை திருட்டு கும்பலா?: பூணூல் அறுப்பு விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
Published:

