தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் : போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார்

திருவண்ணாமலை: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். செங்கம் துக்கா பேட்டையைச் சேர்ந்த முனுசாமியின் மகன் செந்தில்குமார்(26) மின்வாரிய இளநிலைப் பொறியாளராகப் பணியில் உள்ளார். செந்தில்குமாருக்கும் ஆற்காட்டைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரிப் பெண் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டு, ஏற்பாடு நடைபெற்றது. புதன் இன்று காலை 6–7.30 மணி அளவில் முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை அடுத்து, நேற்று இரவு துக்காப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் மணமக்கள் அழைப்பு நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர், இன்று காலை 4 மணி அளவில் மணமகன் செந்தில்குமார், புரோகிதரை போன் மூலம் தொடர்பு கொண்டு வெளியில் சென்றுவிட்டு வருவதாகக் கூறி வெளியில் சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் மண்டபத்துக்குத் திரும்பவில்லை. முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மாப்பிள்ளையை பல இடங்களில் தேடியும் போனில் தொடர்பு கொண்டும், அவர் அகப்படவில்லை. முகூர்த்த நேரம் கடந்த நிலையில், மணமகன் மண்டபத்துக்கு வராததால், அந்தத் திருமணம் நின்று போனது. இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெண் வீட்டார், செங்கம் போலீசில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருமணம் பிடிக்காமல் செந்தில்குமார் ஓடி விட்டாரா அல்லது அவரை யாரேனும் கடத்திவிட்டார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories