பாஜக.,வை பாராட்டி வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

rajini politics - 2026

வயஸானாலும் ரஜினியின் வாய்ஸுக்கு எவ்ளோ மதிப்பு?! பரபரப்பு! ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க… இப்போது ஜாடை மாடையாக வாய்ஸ் கொடுத்து, தனது ஆதரவை பாஜக.வுக்கு அளித்திருக்கிறார் ரஜினி.

ரஜினிகாந்த் எது பேசினாலும் அது பரபரப்பான செய்தியாகிவிடும் சூழ்நிலையில், தற்போது தேர்தல் காலம் வேறு என்பதால், அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிறிய பேட்டி கூட பரபரப்பான செய்தியாகிவிட்டது.

ரஜினி செய்தியாளர்களிடம் பேசிய போது, “தர்பார் பட ஃபர்ஸ்ட் லுக் மிகவும் நன்றாக இருப்பதாக பலர் பாராட்டி உள்ளனர்… கமல் ஹாசனுக்கு ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு, “நான் ஏற்கனவே கூறியது போல் என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவர் எனது சிறந்த நண்பர். எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார் ரஜினி!

நதிகளை இணைத்தால் நாட்டில் வறுமை போய்விடும் என்று கூறிய ரஜினி காந்த், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. நதிகள் இணைப்புக்கு பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் தனி அமைச்சகம் அறிவித்திருப்பதை பாராட்டுகிறேன்.

பா.ஜ.க. கூட்டணி மத்தியில் ஆடசியில் அமைந்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும். இந்த திட்டத்துக்கு “பகீரத்” என்று பெயர் சூட்டுமாறு வாஜ்பாயிடம் கூறினேன் என்று சென்னையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

தேர்தல் குறித்து பேசும் போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைக்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் வாக்குறுதியை முதலில் நிறைவேற்ற வேண்டும்! நதிகளை இணைப்பதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.

இது தேர்தல் நேரம் என்பதால் இதுகுறித்து மேலும் எதுவும் பேச வேண்டாம் என கூறி பேட்டியை முடித்து சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.