வாக்கு கேட்டு வருபவரை தடுத்தால்… கடும் நடவடிக்கை! ராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை

 

rameswaram pamban human chain - 2026

வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களைத் தடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ராமநாதபுரத்தில் உள்ள இஸ்லாமியப் பகுதிகள் சிலவற்றில், பாஜக., வேட்பாளர் வாக்கு கேட்டு செல்வதை அங்குள்ள சிலர் தடுத்து திருப்பி அனுப்புவதாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இசுலாமிய பயங்கரவாத இயக்கங்களின் அரசியல் கட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் எஸ்டிபிஐ. கட்சியும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டு சேர்ந்து, அதிமுக., பாஜக., வேட்பாளர் தங்கள் பகுதிக்குள் வாக்கு சேகரிக்க வருவதை தடுப்பதாகவும், அவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாயின.

veeraragavarao - 2026

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலத்தில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இந்த மனித சங்கிலி பேரணி சாதனை நிகழ்வாகக் கருதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களை யாரேனும் தடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.