நடிகர் பார்த்தீபன் மீது போலீசில் புகார்..!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை

நடிகர் பார்த்தீபன் மீது போலீசில் புகார்..!

சென்னையை சோ்ந்த ஜெயங்கொண்டான் என்பவா் கடந்த 10ஆண்டுகளாக புதிய பாதை எனும் திரைப்படம் மூலம் அறிமுகமான டைரக்டரும் நடிகருமான பார்த்தீபன் வீட்டில் வேலை செய்து வந்தாக கூறப்படுகிறது.
இவா் கடந்த சிலநாட்களுக்கு முன்பு பார்த்தீபன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் பார்த்தீபன் வீட்டில் வேலை செய்து வந்ததாகவும் சமீபத்தில் திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

actor partheban - 2026இதையடுத்து தான் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை கேட்க அவரை சந்திக்க சென்றேன். ஆனால் அவரோ பதில் அளிக்காமல் கோபம் அடைந்து என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ய முயற்சித்தார். தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பார்த்தீபன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.. இந்த புகார் குறித்து பார்த்தீபன் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.