vijayabhaskar minister - 2026

தமிழக அரசு கரூர் ஊராட்சி ஒன்றியம் பகுதி மக்களுக்கு புதிதாக வழங்கி உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள திட்டப்பணிகள் கரூர் அடுத்த மேட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த திட்டப் பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்ட மக்களுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடும் வெப்பத்தின் காரணமாகவும், நீர் நிலைகள் வறண்ட நிலையில் அதிக அளவில் இருப்பதால் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும், பொருட்டும், இன்னும் தேவையான அளவிற்கு கூடுதல் குடிநீர் வழங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரூர் மாவட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசு கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல பகுதிகளுக்கு வழங்கி உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் உள்ள திட்டப்பணிகள் கரூர் மேட்டுப்பாளையம் காவிரி ஆற்றுப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

ALSO READ:  திமாகி நக்சல்கள் – யார் என்று சொல்லவும் வேண்டுமோ?

அந்த திட்டப் பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கரூர் மாவட்டம் முழுமைக்கும் எவ்வாறு குடிநீர் வழங்குவது என்றும், அனைவருக்கும் ஒரே மாதிரியான சீரான குடிநீர் வழங்குவது போன்ற திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி.கீதா மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending