திருப்பூரில் 13 வயது பீகார் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஒடிசா இளைஞரை போலிசார் தேடி வருகின்றனர்.
பீகாரை சேர்ந்த 13 வயது சிறுமி திருப்பூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பணிக்கு சென்ற பின் ஒடிசாவை சேர்ந்த அஜித் க்ரஷல் (26) என்பவர் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவானார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித் க்ரஷல் மீது சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலைய போலிசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அஜித் க்ரஷலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமிக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.




