உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

உள்ளூர் செய்திகள் கோவை சுற்றுலா தமிழகம்

thirumoorthimalai panchalinga falls - 2026

உடுமலை அருகே காய்ந்து கிடந்த திருமுர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழை காரணமாக மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமுர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடந்த சில நாட்களாகவே போதிய மழைப்பெழிவு இல்லாத நிலையில் பஞ்சலிங்க அருவி வரண்டு காணப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் தென்மேற்க்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் மழைகாரணமாகதிருமுர்த்தி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளான குருமலை ,குழிப்பட்டி , ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல பகுதிகளில் மழைப்பெய்த காரணத்தால் பஞ்ச லிங்க அருவியில் நிர்வரத்து அதிகமாக உள்ளது.

பலநாட்கள் நீர் வரத்தின்றி காய்ந்து கிடந்த பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.